ஏர் இந்தியாவை வாங்குவதில் "டாடா" குழுமம் தீவிரம் காட்டுவதாகத் தகவல்
ஏலத்திற்கு வரும், பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவை விலைக்கு வாங்க, நாட்டின் பிரபல தொழில் குழுமமான டாடா தீவிரம் காட்டி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, தனது விஸ்தாரா விமான நிறுவனத்தின் கூட்டு பங்குதாரரான சிங்கப்பூர் ஏர்லைன்சுடன் இணைந்து, செயல் திட்டத்தை வகுத்து வருவதாகவும், சொல்லப்படுகிறது.
மேலும், ஏர் இந்தியாவின் 100 விழுக்காட்டு பங்குகளையும், மத்திய அரசின் மானியத்துடன், கையகப்படுத்த திட்டமிடும் நிலையில், மேலும் தேவைப்படும் நிதி மூலதனத்தை உருவாக்கிடும் வகையில், மலேசிய தொழில் அதிபர் டோனி பெர்னான்டசின் (Tony Fernandes) ஏர் ஏசியா விமான நிறுவனத்துடனும், டாடா குழுமம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்றைய ஏர் இந்தியா என்ற பிரம்மாண்டத்திற்கு முதல் பிள்ளையார் சுழியே டாடா குழுமத்தின் டாடா ஏர்லைன்ஸ் என்பது நினைவுகூறத்தக்கது
Comments